Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஐங்குறுநூறு வினா - விடைகள்!

ஐங்குறுநூறு வினா - விடைகள்!! 



1. ஐங்குறுநூற்றின் குறிஞ்சி திணையைப் பாடியவர் யார்? - கபிலர் 

2. ஐங்குறுநூற்றின் முல்லை திணையைப் பாடியவர் யார்? - பேயனார் 

3. ஐங்குறுநூற்றின் மருதத் திணையைப் பாடியவர் யார்? - ஓரம்போகியார் 

4. ஐங்குறுநூற்றின் நெய்தல் திணையைப் பாடியவர் யார்? - அம்மூவனார் 

5. ஐங்குறுநூற்றின் பாலைத் திணையைப் பாடியவர் யார்? - ஓதலாந்தையார் 

6. ஐங்குறுநூறு நூலைத் தொகுத்தவர் யார்? - புலத்துறை முற்றிய கூடலூர்க்கிழார்

7. ஐங்குறுநூறு நூலைத் தொகுப்பித்தவர் யார்? - யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை

8. ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர் யார்? - பாரதம் பாடிய பெருந்தேவனார் 

9. ஐங்குறுநூற்றின் அடி வரையறை எத்தனை? - 3 அடி சிற்றெல்லை - 6 அடி பேரெல்லை

10. ஐங்குறுநூறு எவ்வகை பாவால் ஆனது? - அகவற்பா

11. ஐங்குறுநூற்றில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை? - 500

12. ஐங்குறுநூறு பிரித்து எழுதுக. - ஐந்து+ குறுமை+நூறு

Post a Comment

0 Comments