Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TEACHER JOBS - ஆசிரியர்களுக்கு வாய்ப்பு-அரசு பள்ளியில் வேலை

TEACHER JOBS - ஆசிரியர்களுக்கு வாய்ப்பு-அரசு பள்ளியில் வேலை
அரியலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மேல்நிலைப்பள்ளிகளில் கீழ்க்கண்ட விவரப்படி ஆசிரியர் பணியிடம் காலியாகவுள்ளது.

காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. மேற்கண்ட காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்தனையின் அடிப்படையிலும் நிரப்பப்படவுள்ளது. மேற்கண்ட பணியிடங்களுக்கான ஊதியம் முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.18.000/- வீதம் வழங்கப்படும். இதற்கான கல்வித் தகுதி பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேற்கண்ட இந்த தற்காலிக பணி நியமனமானது. நியமனம் செய்யப்படும் நாள்முதல் ஆசிரியர் தேர்வு வாரியம் / பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும் வரை அல்லது இக்கல்வியாண்டில் பள்ளி இறுதி தேர்விற்கு முந்தைய மாதம் வரை இவற்றில் எது முன்னரோ அது வரை ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற பணிநாடுநர்களை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தெரிவு செய்து தற்காலிகமாக நிரப்பி கொள்ள வேண்டும்.

மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தனது எழுத்து மூலமான விண்ணப்பத்தினை உரிய கல்வித் தகுதி சான்றாவணங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அரியலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அறை எண்: 35-ல் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல 05.07.2024 மாலை 5.45-க்குள் ஒப்படைத்திட வேண்டுமென மாவட்ட திருமதி.ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments