Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Agriculture -நெற்பயிர்களில் ஊட்டச்சத்துக் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள்

Agriculture -நெற்பயிர்களில் ஊட்டச்சத்துக் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள்
நெற்பயிர்களில் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறை பாடுகளை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யும் வழிமுறைகளை தமிழகவேலாண் துறை அறிவித்துள்ளது.

இது குறித்து அந்தத் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

நெற்பயிரின் இலைகள் முற்றிலும் மஞ்சளாக மாறினால், ஒரு சதவீதம் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 0.5 சதவீதம் பெரஸ் சல்பெட் கரைசலை பயிர்களின் இலைகளில் தெளிக்க வேண்டும். அதே போல், நெற்பயிர்கள் ஒழுங்கற்ற முறையில் வளர்வது மற்றும் நெல் மணியில் அதிக அளவில் பதர் காணப்பட்டால், ஒரு சதவீதம் சூப் | பர் பாஸ்பேட் மற்றும் மக்னீசியம் சல்பேட் கரைசலை செடிகளில் | தெளிக்கவேண்டும்.

மேலும்,இலையின் நுனி உதிர்தல் மற்றும் இலைக்கருகல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், ஒரு சதவீதம் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 0.5 சதவீதம் துத்தநாக (ஜீன்க்) சல்பேட் கரைசலை தெளிக்கலாம்.

இதில் ஒரு சதவீதம் என்பது ஒரு லிட்டர் தண்ணீரில் 10 கிராம் கரைப்பானை கலக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments