Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

கல்லூரி படிப்பு வரை மாதம் 1000 scholarship - 11 ம் வகுப்பு படிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் -முழுவிவரம்‎

கல்லூரி படிப்பு வரை மாதம் 1000 scholarship - 11 ம் வகுப்பு படிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் -முழுவிவரம்‎
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6.

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு (TNCMTSE) - ஜூலை 2024

செய்திக் குறிப்பு

2024 2025 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு, 21.07.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 2023-2024 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயின்று தற்போது 2024-2025 ஆம் கல்வியாண்டில் பதினொன்றாம் வகுப்பினை அரசுப் பள்ளிகளில் பயிலும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். மாணாக்கர்கள் இத்தேர்வில் 1000 மாணாக்கர்கள் (நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 500 மாணவர்கள் + 500 மாணவியர்கள்) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு ரூபாய் 10,000/-(மாதம் ரூ.1000/- வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும் ) இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசின் 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் கணிதம், அறிவியல் மற்றும் சமூகஅறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறிவகையில் தேர்வு இருதாள்களாக நடத்தப்பெறும். முதல் தாளில் கணிதம் தொடர்புடைய வினாக்கள் 60 இடம்பெறும். இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூகஅறிவியல் தொடர்புடைய வினாக்கள் 60 இடம்பெறும். முதல் தாள் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரையிலும் இரண்டாம் தாள் பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரையிலும் நடைபெறும். மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினை 11.06.2024 முதல் 26.06.2024 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேர்வு கட்டணம் ரூ.50/- (ரூபாய் ஐம்பது மட்டும்) சேர்த்து 26.06.2024-ற்குள் மாணவர் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

Post a Comment

0 Comments