Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TRB EXAM - பட்டதாரி ஆசிரியர் தேர்வு- மறு தேர்வு கோரிக்கை

TRB EXAM - பட்டதாரி ஆசிரியர் தேர்வு- மறு தேர்வு கோரிக்கை

2023-24 ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் வட்டார வளமைய ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதி தேர்வு கடந்த மாதம் பிப்ரவரி நான்காம் தேதியும் நடத்தப்பட்டது. இந்த தேர்வினை மொத்தம் 41,478 ஆசிரியர்கள் விண்ணப்பித்து இருந்தனர். 

இந்த தேர்வுக்கான தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் மே மாதம் 18 மற்றும் 22 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆசிரியர் போட்டி தேர்வில் பல்வேறு வினாக்கள் தவறாக கேட்கப்பட்டுள்ளதாக  குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. 


அதில் தமிழில் 48வது கேள்வி உட்பட ஆறு வினாக்களும், ஆங்கில பாடத்தில் 13 கேள்விகள் தவறாகவும், குறிப்பாக 121 வது கேள்வி தவறானதாகவும், கணித பாடத்தில் பதினேழு கேள்விகள் தவறாக கேட்கப்பட்டுள்ளதாகவும் தேர்வுகள் குற்றம் சாட்டியுள்ளனர். 


வேதியல் பாடத்தில் 12 வினாக்களும் இயற்பியல் பாடத்தில் 7 வினாக்களும் விலங்கியல் பாடத்தில் மூன்று வினாக்களும் புவியியல் பாடத்தில் 11 வினாக்களும் தவறாக கேட்கப்பட்டதாக தேர்வுகள் குற்றம்சாட்டி உள்ளனர்.


கேள்வித்தாளில் ஓரிரு கேள்விகள் தவறாக கேட்கப்பட்டிருந்தால் அது கவனக்குறைவு என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு தேர்விலும் ஏராளமான கேள்விகள் தவறாக கேட்கப்பட்டிருப்பதாக தேவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் தேர்வர்கள் உடனடியாக மறுத்தேர்வு நடத்த வேண்டும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு கோரிக்கையை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments