Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC GROUP IV - குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு- DOWNLOAD HALL TICKET DIRECT LINK

TNPSC GROUP IV - குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு- DOWNLOAD HALL TICKET DIRECT LINK 
09.06.2024 முற்பகல் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - IV (தொகுதி- IV பணிகள்)-இல் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கொள்குறி வகை ( OMR முறை) தேர்வு.

செய்திக்குறிப்பு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 01/2024, நாள் 30.01.2024- இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி-IV பணிகள்)-இல் அடங்கிய - பதவிகளுக்கான கொள்குறி வகை(OMR முறை) தேர்வு 09.06.2024 முற்பகல் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.



இணையதளத்தை அதிகமான பயனாளர்கள் ஓபன் செய்து உள்ளதால் Error என்ற பக்கம் உருவாகி உள்ளது. 

எனவே சிறிது நேரம் கழித்து ஓபன் செய்து பார்க்க வேண்டும் நண்பர்களே!



Post a Comment

0 Comments