Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

EDUCATION NEWS- சிபிஎஸ்இ- யில் தமிழ் பாட தேர்வு கட்டாயம்: பள்ளி கல்வித்துறை தகவல்

EDUCATION NEWS- சிபிஎஸ்இ- யில் தமிழ் பாட தேர்வு கட்டாயம்: பள்ளி கல்வித்துறை தகவல்



2024-25-ம் கல்வியாண்டில் 10-ஆம்  வகுப்பில் தமிழ் பாடம் கட்டாயமாகிறது. இது மாநில பாடத்திட்ட பள்ளிகளுக்கு மட்டுமல்லாமல் தமிழகத்தில் செயல்படும் CBSE, ICSE உட்பட அனைத்து விதமான பள்ளிகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. 

மாணவர்கள் பொதுத்தேர்விலும் தமிழை ஒரு தேர்வாக கட்டாயம் எழுத வேண்டும். இதற்கான தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம் விரைவில் வெளியிடப்பட உள்ளது. 

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலர் ஜெ.குமரகுருபரன் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இதர கல்வி வாரியங்களின் கீழ் இயங்கும் பள்ளிகள் மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்வதற்கு தேவையான பணிகளை மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments