Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத/தேர்வு எழுதாத மாணவர்கள், தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத மறுத்தேர்வு

11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத/தேர்வு எழுதாத மாணவர்கள், தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத மறுத்தேர்வு
நான் முதல்வன் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத/ தேர்வு எழுதாத மாணவர்கள் மே 16.05.2024 முதல் ஜூன் 1.06.2024 ஆம் தேதி வரை மறுத்தேர்விற்கு பள்ளிக்கு வந்து விண்ணப்பித்தல் சார்ந்து

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதற்காக நடப்பு கல்வியாண்டில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத/தேர்வு எழுதாத மாணவர்கள், தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத மறுத்தேர்விற்கு 16.05.2024 (வியாழக்கிழமை முதல்) 01.06.2024 (சனிக்கிழமை) வரையிலான நாட்களில் (ஞாயிற்றுக்கிழமை தவிர) காலை 11.00 மணி முதல் மாலை 5.00 வரை தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம் என்ற தகவலை தலைமையாசிரியர்கள் வாயிலாக மாணவர்களுக்கு தெரிவித்து மாணவர்களை விண்ணப்பிபதற்கு தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்ப்படுகின்றார்கள்.

Post a Comment

0 Comments