சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் சித்திரைத்தேர் திருவிழாவை முன்னிட்டு 16.04.2024 அன்று உள்ளுர் விடுமுறை விடப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைத் தேர்த் திருவிழாவினை முன்னிட்டு அருள்மிகு 16.04.2024 செவ்வாய்க்கிழமையன்று உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். ஆயினும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது. இவ்விடுமுறையினை ஈடுசெய்யும் பொருட்டு 08.06.2024 சனிக்கிழமையன்று பணிநாளாக செயல்படும்.
மேற்கண்ட விடுமுறை நாளில் அரசு பாதுகாப்பு தொடர்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், கருவூலங்கள் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு செயல்படும்.
இவ் உள்ளூர் விடுமுறையானது 2024பாராளுமன்ற தேர்தல் பணியில்ஈடுபட்டிருக்கும் அலுவலர்கள்/பணியாளர்களுக்கு பொருந்தாது.
0 Comments