1.COMBINED CIVIL SERVICES EXAMINATION-II (INTERVIEW POSTS AND NON-INTERVIEW POSTS) (GROUP-II AND IIA SERVICES) (Final Result)-CLICK HERE
2.COMBINED CIVIL SERVICES EXAMINATION-II (INTERVIEW POSTS AND NON-INTERVIEW POSTS) (GROUP-II AND IIA SERVICES) (Oral Test Mark)-CLICK HERE
3.COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV (GROUP-IV SERVICES) (Counselling)-CLICK HERE
4..RASHTRIYA INDIAN MILITARY COLLEGE,DEHRADUN (JANUARY-2025 TERM) (Notification)-CLICK HERE
5.ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவியாளர் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான கணினி வழிச் சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பான செய்தி வெளியீடு (Press Release)-CLICK HERE
5.24.07.2022 முற்பகல் அன்று நடைபெற்ற தொகுதி – IV பணிகளில் அடங்கிய இளநிலை உதவியாளர் பதவிக்கான மூன்றாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தொடர்பான செய்தி வெளியீடு (Press Release):
தொகுதி IV பணிகளில் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர் / இளநிலை உதவியாளர் / கள உதவியாளர் / வரித்தண்டலர், நிலை 1 / வரித் தண்டலர் / பண்டகக் காப்பாளர் போன்ற பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், 30.03.2022 நாளிட்ட அறிவிக்கை எண் 07/2022ன் வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிக்கான எழுத்துத்தேர்வு கடந்த 24.072022 முய அன்று நடைபெற்று, எழுத்துத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் 24.03.2023 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
தொகுதி IV பணிகளில் அடங்கிய இளநிலை உதவியாளர் பதவிக்கான மூன்றாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 08.03.2024 அன்று தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எண் 3, தேர்வாணையச் சாலை (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்), சென்னை 600 003ல் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மேற்படி மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் ஒட்டுமொத்த தரவரிசை எண் / காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக தெரிவாளர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள், நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக்கடிதத்தினை விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.inலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான விவரம் SMS மற்றும் E-mail மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு பங்கேற்க அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண்கள் / ஒட்டுமொத்த தரவரிசை / இடஒதுக்கீட்டு விதிகள் / விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர். எனவே, அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் மேற்படி மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வர தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்