Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Chennai: சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் இன்று (05.03.2024) முதல் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதனபொருட்கள் சட்டம் -1940 மற்றும் -1945 அட்டவணை "X " மற்றும் "H","H1" Drugs குறிப்பிட்டுள்ள மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்துகடைகளிலும் குற்றவியல் நடைமுறை சட்டம் -1973 பிரிவு 133-ன்கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றைய (05.03.2024) நாளில் இருந்து 30நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

தவறும்பட்சத்தில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வின் போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது மேற்கண்ட உரிய சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் 61601 சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments