தமிழறிஞர்களை நினைவு கூறும் வகையில் இலக்கியக் கருத்தரங்கம் மற்றும் பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி 30.01.2024
தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் பின்வருமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
"தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் நினைவிடங்களில் அவர்களின் பிறந்த நாளன்று உள்ளூர் இலக்கிய அமைப்புகள் மூலம் ஆண்டுதோறும் கவியரங்கம், கருத்தரங்கள் இலக்கியக் கூட்டங்கள் 150 இடங்களில் நடத்தப்படும்".
இவ்வறிவிப்பிற்கிணங்க செங்கல்பட்டு மாவட்டத்தில் மறைமலையடிகள், வை.மு.கோதைநாயகி மற்றும் எழுத்தாளர் ஞாநி இவர்களின் நினைவைப் போற்றும் வகையில் கருத்தரங்கம் 01.02.2024 அன்று நடத்தவும். அதற்கு முன்னதாக மறைமலையடிகள், வை.மு.கோதைநாயகி மற்றும் எழுத்தாளர் ஞாநி ஆகியோரின் இலக்கியப் பணி தமிழ்த் தொண்டு மற்றும் தமிழ்மொழிக்கான பங்களிப்பு ஆகியவற்றை நினைவுக்கூறும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுபோட்டி 30.01.2023 அன்று நடத்தி வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசு. பாராட்டுச் சான்றிதழ் 01.02.2024 எஸ்.ஆர்.எம் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ள இலக்கியக் கூட்டத்தில் வழங்கப் பெறவுள்ளது.
முதல் பரிசு-ரூ.5000/-, இரண்டாம் பரிசு- ரூ.3000/-, மூன்றாம் பரிசு- .2000/- என பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே வழங்கப்பெறும்.
30.01.2023 அன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் செங்கல்பட்டு இராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 10.00 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. போட்டியில் ஒரு பள்ளி / கல்லூரிக்கு ஒருவர் வீதம் பள்ளி தலைமையாசிரியர் / கல்லூரி முதல்வர் பரிந்துரையுடன் போட்டியில் கலந்துக் கொள்ளலாம். பரிந்துரையின்றி வருவோர். தாமதமாக வருவோர் போட்டியில் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்.
போட்டிக்கான தலைப்புகள்
1. தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள்
2. வை.மு.கோதைநாயகியின் பன்முகத்திறன்
3. எழுத்தாளர் ஞாநியின் சமுதாயச் சிந்தனை
மேற்காணும் தலைப்புகளை ஒட்டியே பேச அனுமதிக்கப்படுவர்.
குலுக்கல் முறையில் தலைப்புகளை தெரிவுசெய்யப்படும் எனவே அனைத்து தலைப்புகளிலும் பேச ஆயத்தமாக வரவேண்டும்.

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்