Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Teacher News: பகுதி நேர தொகுப்பூதிய ஆசிரியர்கள் ஊதியம் உயர்வு-அரசாணை வெளியீடு

Teacher News: பகுதி நேர தொகுப்பூதிய ஆசிரியர்கள் ஊதியம் உயர்வு-அரசாணை வெளியீடு
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேராசிரியர் அன்பழகனார் வளாகத்தில் பல்வேறு ஆசிரியர் சங்க அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்ததைத் தொடர்ந்து 04.10.2023 அன்று மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் பகுதிநேர ஆசிரியர்கள் சார்ந்து கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்கள்.

அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் நியமிக்கப்பட்ட (16,549) பல்வேறு சிறப்பு ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருவது தெரிந்ததே. இவர்களின் தற்போது பணியில் இருப்பவர்கள் 10,359 ஆசிரியர்கள் ஆவார்கள். இவர்கள் அனைவரும் 5,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டு தற்போது 10,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகின்றது. இவர்களின் முந்தைய கோரிக்கையான ஓய்வு பெறும் வயதினை 60 ஆக்குவது மற்றும் அவர்களுக்கு விரும்பிய மாவட்டத்திற்கு மாறுதல் அளிப்பது என்பதை அரசு ஏற்று ஏற்கனவே நடைமுறைப்படுத்தி உள்ளது. (ல் தற்போது நிதி நெருக்கடி இருந்தாலும் இவ்வாசிரியர்களுக்கு மாத ஊதியத்தினை 12,500 ரூபாயாக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments