Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

LATEST NEWS:அரசுப்பள்ளிகளில் அந்தப்பள்ளி தலைமையாசிரியர்கள் கொடியேற்ற வேண்டும்

பள்ளிக்கல்வித்துறை அறிவுரரைகளின்படி அரசுப்பள்ளிகளில் அந்தப்பள்ளி தலைமையாசிரியர்கள் கொடியேற்ற வேண்டும்.
பார்வையில் காணும் கடிதம் மீது தங்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது.

ஊரகப் பகுதிகளில் நமது இந்திய மக்களாட்சியின் முக்கிய நிகழ்வுகளாக நாடு முழுவதும் கொண்டாடப்படும் நாட்களான. சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய நாட்களில் இந்திய தேசியக் கொடியினை அனைத்து அரசு அலுவலகங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களிலும் ஏற்றி வைக்கும் சம்பிரதாய முறைகள் நடைமுறையில் உள்ளன.

கிராம ஊராட்சியின் அலுவலகங்களில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்திடும் பொறுப்பு கிராம ஊராட்சித் தலைவர்கள் வசம் உள்ளது. மேலும் கிராம ஊராட்சிகளில் அமையப் பெற்றுள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் ஆகியவற்றில் தேசியக் கொடியினை ஏற்றிடும் பொறுப்பு அத்தகைய பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மூலம் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த முக்கிய தருணங்களில், அவ்வூராட்சியில் அமைந்துள்ள அரசு மற்றும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் கொடியேற்றுவது குறித்து துறைகளால் வழங்கப்பட்டுள்ள நெறிமுறைகள் உரியவாறு எடுத்து சொல்லப்படாத நிலையில் கிராம ஊராட்சித் தலைவர்கள், பள்ளிகளில் தேசியக் கொடியேற்ற முனைப்பு காட்டுவதினால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

மேலும், தேசியக் கொடி ஏற்றுகின்ற நிகழ்வானது. குறிப்பிட்ட கால அளவில் நடைபெற வேண்டியுள்ளதால் கிராம ஊராட்சித் தலைவர்கள் தத்தமது கிராம ஊராட்சியின் கிராம ஊராட்சி அலுவலகக் கட்டிடத்தில் உள்ள கொடிக் கம்பத்தில் மூவர்ண தேசியக் கொடியினை ஏற்றிட வேண்டும்.

Post a Comment

0 Comments