Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Education News:மருத்துவ விடுப்பு குறைக்கப்பட்ட விடுப்பை மீண்டும் ஈட்டிய விடுப்பு கணக்கில் வரவு வைக்கலாமா-முதன்மை கல்வி அலுவலரின் விளக்கம்

மருத்துவ விடுப்பு குறைக்கப்பட்ட விடுப்பை மீண்டும் ஈட்டிய விடுப்பு கணக்கில் வரவு வைக்கலாமா-முதன்மை கல்வி அலுவலரின் விளக்கம்
பார்வையில் காணும் கடிதத்தின்படி, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கல்வி மாவட்டம் அகஸ்தீஸ்வரம், அரசு மேல்நிலைப் பள்ளியில் கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகப் பணிபுரியும் திரு.சா.கிறிஸ்டோபர் தங்கராஜ் என்பார் வயது முதிர்வில் 30.04.2024 பிற்பகல் ஓய்வு பெறவுள்ளதால் ஊதியத்துடன் கூடிய மருத்துவ சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு துய்த்த நாட்களுக்கு ஏற்றவாறு கணக்கில் சேர்க்கப்படும் ஈட்டிய விடுப்பு குறைவு செய்தல் சார்பாக தெளிவுரை வேண்டி பார்வை 5 ன்படிகருத்துரு விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது.

திரு.சா.கிறிஸ்டோபர் தங்கராஜ் என்பார் பார்வை 1 மற்றம் 2ல் காணும் அரசு கடிதத்தின்படி தாம் பணியேற்ற நாள் முதல் அனுபவித்த ஊதியத்துடன் கூடிய மருத்துவ சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு துய்த்த நாட்களுக்கு ஏற்றவாறு கணக்கில் சேர்க்கப்படும் ஈட்டிய விடுப்பு குறைவு செய்த நாட்களை மீள ஈட்டிய விடுப்பு கணக்கில் சேர்த்திட வேண்டி விண்ணப்பம் அளித்துள்ளார்.

பார்வை 3ல் காணும் அரசு கடிதம் வெளியிடப்பட்ட நாளான 23122019 க்குப் பின்னர் ஊதியத்துடன் கூடிய மருத்துவ சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு துய்த்த நாட்களுக்கு ஏற்றவாறு கணக்கில் சேர்க்கப்படும் ஈட்டிய விடுப்பு குறைவு செய்த நாட்களை மீள ஈட்டிய விடுப்பு கணக்கில் சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியருக்கு தெரிவிக்கலாகிறது. மேலும் தமிழ்நாடு விடுப்பு விதிகளின்படி தக்க நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர் அறிவுறுத்தப்படுகிறார்.

மேலும், இவ்வலுவலகத்திற்கு தெளிவுரை சார்ந்து கருத்துருக்களை அனுப்புவதை தவிர்த்திடவும் தலைமையாசிரியருக்கு அறிவிக்கலாகிறது.

Post a Comment

0 Comments