Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்- தேதிகள் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்-தேதிகள் அறிவிப்பு!


தமிழ்நாட்டில் வரும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எந்தெந்த தேதிகளில் அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சனிக்கிழமை வேலை- நாள் தேதி அறிவிப்பு:

தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு நான்கு வாரங்களுக்கு சனிக்கிழமைகளில் அனைத்து பள்ளிகளும் செயல்படும் என சென்னை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். ஜனவரி மாதத்தில் 6 மற்றும் 20 தேதியும், பிப்ரவரி மாதம் 3 மற்றும் 17ஆம் தேதியும் ஆகிய சனிக்கிழமைகளில் சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments