தமிழ்நாடு வனத்துறை தமிழ்நாடு புதுமை முயற்சி (Tamil Nadu Innovation Initiative) திட்டம் 8 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்டங்களில் முக்கியமான வனஉயிரினங்களை அடையாளம் கண்டு அது குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் ஒரு மையம் அமைக்கப்பட்டு, வனஉயிரினம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
வனஉயிரினம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு தற்காலிகமாக ஒரு உயிரியலாளர் பணியிடம் (கல்வித் தகுதி : உயிரியல் / விலங்கியல் / உயிரியியல் தொழில்நுட்பம் ஆகிய ஏதேனும் ஒன்றில் முனைவர் பட்டம் அல்லது முதுகலை பட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் இரண்டு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்).
ஒரு தற்காலிக தொழில் நுட்ப உதவியாளர் பணியிடம் (கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும் மற்றும் Photoshop தெரிந்திருக்க வேண்டும்). மேற்கண்ட தகுதியுடைய நபர்கள் தங்களது சுயவிபரத்துடன் 10.01.2024 க்குள் திருநெல்வேலி மாவட்ட வன அலுவலத்தில் நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கவும்.
மேலும் திருநெல்வேலி மாவட்ட கடற்கரை பகுதியில் கடல்வாழ் உயிரினங்கள் தொடர்பான பாதுகாப்பு / ரோந்து பணி மேற்கொள்வதற்கு 4 மாதத்திற்கு மட்டும் ஒரு படகு வாடகைக்கு ஒப்பந்த அடிப்படையில் வனத்துறைக்கு தேவைப்படுகிறது.
அதற்கு விருப்பமுள்ளவர்கள் வருகிற 05.01.2024 -க்குள் மாவட்ட வன அலுவலகம், திருநெல்வேலி 0462 - 2553005 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்