Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

Breaking: TRB இன்று வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

Teachers Recruitment Board latest news 

ஆசிரியர் தேர்வு வாரியம்

பத்திரிக்கைச் செய்தி





ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய பயிற்றுநர் 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண். 03/2023, நாள் 25.10.2023 அன்று வெளியிடப்பட்டு, விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 07.12.2023 மாலை 5.00 மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில். மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால தீர்ப்பாணையின்படியும் மற்றும் மிக்ஜாம் (Michaung) புயல் மழையின் காரணமாகவும் மேற்காண் பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி தேதி 07.12.2023 லிருந்து 13.12.2023 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இதனைதொடர்ந்து, விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் (Edit Option) மேற்கொள்ள அவகாசம் வழங்க கோரியதின் அடிப்படையில்,பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய பயிற்றுநர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் (Edit Option) மேற்கொள்ள விரும்பினால் 14.12.2023 மற்றும் 15.12.2023 ஆகிய இரண்டு நாள்களுக்கு திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என  தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments