திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பெய்த அதி கனமழையின் காரணமாக மிகக் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்க அனைத்து துறையினரும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து பணியாற்றி தற்போது சகஜ நிலை திரும்பி வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 21.12.2023 அன்று திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழையின் காரணமாக மிகக் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்தும், ஆய்வுக்கூட்டங்கள் வாயிலாக பாதிப்புகள் குறித்தும் கேட்டறிந்து, இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மீட்ப்பதற்காக பின்வரும் அறிவிப்புகளை வெளியிட்டார்கள்.
அதிகனமழையின் காரணமாக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிகக் கடுமையாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள வட்டங்களில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக 6 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படும்"
மேலும், இந்த மாவட்டங்களில் உள்ள இதர வட்டங்களுக்கும் மற்றும் கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு அங்குள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்கள்.
அதன்படி பாதிப்பு ஏற்பட்டுள்ள வட்டங்களில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தொகை வழங்குவதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணி 26.12.2023 முதல் திருநெல்வேலி மாவட்டத்தில் தொடங்கப்படவுள்ளது. நியாயவிலைக் கடை பணியாளர்கள் தங்கள் வீடுகளுக்கே நேரில் வந்து டோக்கன்களை விநியோகிப்பார்கள். அதில் நிவாரணத்தொகை பெறும் நாள் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த குறிப்பிட்ட நாளில் பொதுமக்கள் நிவாரணத்தொகையினை நியாய விலைக்கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்