Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

பிரதமரின் கல்வி உதவித்தொகை- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி-உதவிதொகை பற்றிய விபரம்

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் (National Scholarship Portal) விண்ணப்பிக்கலாம்.


இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரப்பினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் 30,000 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது. 2023-2024 ஆம் ஆண்டிற்கு https://scholerships.gov.in/public/FAQ/topclass School list 2211 compressed.pdf என்ற இணைய முகவரியில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த 3,093 மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற பெற்றோரின் உச்சகட்ட வருமான வரம்பு ரூ.2.5 இலட்சம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க 31.12.2023 கடைசி தேதி, கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்க்க 15.01.2024 கடைசி நாள் ஆகும்.

மேலும், இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவிர்யர்கள் தேசிய கல்வி உதவி தொகை தளத்தில் (National Scholarship Portal) Renewal Application 67 இணைப்பில் (Link) சென்று கடந்த ஆண்டில் இத்திட்டத்தின்கீழ் பெறப்பட்ட விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் பதிவு செய்து 2023-2024 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பத்தினை புதுப்பித்து கொள்ளலாம்.

இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் முறையே 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித் தொகையானது வழங்கப்படும். 

எனவே 60 சதவீதம் மற்றும் அதற்கு அதிகமாக 8 மற்றும் 10 ஆம் ஆண்டுகளில் மதிப்பெண்கள் பெற்ற பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவியர்கள் தேசிய கல்வி உதவித் தொகையை தளத்தில் (National Scholarship Portal) New Registration என்ற இணைப்பில் (Link) சென்று தங்களது விபரங்களை பதிவு செய்தும், பெறப்பட்ட விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் பதிவுகளை Fresh Application என்ற இணைப்பின்கீழ் பதிவு செய்து உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு National Scholarship Portal (https://scholarships.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் இணையதளத்தினை (http://socialjustice.gov.in) அணுகி கல்வி உதவித் தொகை பயன்களைப் பெறலாம்.

Post a Comment

0 Comments