அரசாணை(நிலை) எண் 96 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்(ஆதிநன)துறை நாள் 25.112021 இன்படி முழுநேர முனைவர் பட்டப் படிப்பு மேற்கொள்ளும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இன மாணவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.100,000/- வீதம் 2021.2022-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் என அரசு ஆணையிட்டுள்ளது. எனவே கீழ்க்கண்ட விதிமுறைகளுக்குட்பட்டு 2023-2024 ஆம் ஆண்டில் முழுநேர முனைவர் பட்டப்படிப்பு பயின்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1) தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் முழுநேர முனைவர் பட்டப்படிப்பு (Ph.D.) மேற்கொள்ளும் தமிழ்நாட்டைச் சார்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர். பகுதி நேர ஆராய்ச்சி மாணவர்கள் பயன்பெற இயலாது.
2) இத்திட்டத்தின்கீழ் பயனடைய நிர்ணயிக்கப்பட்டுள்ள வருமான வரம்பான ரூ.8.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3) இத்திட்டத்தின் கீழ் கல்வி ஊக்கத் தொகை வேண்டி விண்ணப்பிக்க முதுகலைப் பட்டம் படிப்பில் 50% விழுக்காடு பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4) 1600-க்கும் அதிகமான எண்ணிக்கை அளவில் கல்வி ஊக்கத் தொகை வழங்கக்கோரி விண்ணப்பங்கள் வரப்பெறும் நேர்வில் மாணாக்கர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 1500 பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.
5) ஒன்றுக்கும் மேற்பட்ட கல்வி உதவித் தொகை / நிதியுதவித் திட்டத்தின் (போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை, JRF, National Fellowship for SC & ST. DPI Fellowship, RUSA. TRF & URF ) கீழ் பயன் பெறுபவராக இருத்தல் கூடாது. மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் நிதியுதவி அல்லது பிற திட்டங்களில் பெறும் நிதியுதவி இவற்றில் அதிக பயன்தரும் திட்டத்தை தேர்ந்தெடுக்க அனுமதிக்கலாம்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்