விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய தலைப்பில் காலியாக உள்ள மூன்று (3) அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலையின் பெயர்: அலுவலக உதவியாளர்
மொத்த காலி பணியிடங்கள்: 03
ஊதியம்: ரூ.15,700/-(15700-50000) கல்வித்தகுதி மற்றும் இதர தகுதிகள்:
8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்
வயதுவரம்பு பற்றிய முழு விவரங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள்:
அனைத்து சான்று நகல்களிலும் சுய சான்றொப்பமிடப்பட்டு இணைத்து அனுப்பப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் அசல் சான்றாவணங்கள் இணைக்கப்படக்கூடாது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 11.10.2023 முதல் 31.10.2023 பிற்பகல் 05.45 மணிக்குள் ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், இராஜபாளையம் என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது பதிவுத் தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும். காலதாமதமாக வரப்பெற்ற விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றி முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Notification -CLICK HERE
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்