டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகள் மற்றும் நல திட்டங்கள் வருங்கால இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக நடத்திட தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித் துறையால் 12 குழுக்கள் அமைக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர் எனும் குழு. நூற்றாண்டு விழா நாயகன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளில் அவரது பரிமாணங்களை போற்றும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை வருகிறது. செய்து
அந்த வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர் எனும் குழுவின் சார்பில் குறும்படபோட்டி (Short film Competition) மற்றும் சுருள்படபோட்டி (Reels Competition) நடத்தப்படவுள்ளது.
குறும்படபோட்டியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர் (உதாரணமாக சமூக நீதி, கல்வியில் புரட்சி, சுகாதார துறையில் புரட்சி, தொழிற்துறை மேம்பாடு. மாநில அரசின் உரிமை, பெண்கள் முன்னேற்றம், கிராமப்புற/நகர்ப்புற வளர்ச்சி) என்ற தலைப்பில் புதிய குறும்படங்களை (அதிகபட்சம் 10 நிமிடங்கள்) உருவாக்கி அதனை இணைப்பில் உள்ள விண்ணப்பங்களுடன் 20.12.2023 தேதிக்குள் (shortfilmkalaignar100@gmal.com) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சுருள்படபோட்டியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தொலைநோக்குச் சிந்தனையாளர் கலைஞர் எனும் தலைப்பில் புதிய சுருள்படங்களை 30 வினாடிகள் முதல் நிமிடம் 1 விண்ணப்பங்களுடன் வரை இருக்கும் வகையில் உருவாக்கி இணைப்பில் 20.12.2023 உள்ள தேதிக்குள் (reelskalalgnar100@gmall.com) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்