Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள்


தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே, முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவினைக் கருப்பொருளாகக் கொண்டு. மாவட்ட / மாநில அளவிலான கலைப் போட்டிகள் குரலிசை, பரதநாட்டியம். கிராமிய நடனம், கருவியிசை மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் திருப்பூர் மாவட்ட அளவிலான போட்டிகள் திருப்பூர், விவேகானந்தா நகர், சிக்கண்ணா அரசுகலைக் கல்லூரி வளாகத்தில் 28-10-2023 அன்று நடைபெறவுள்ளது.

குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், போட்டிகள் காலை 10.00 மணிக்கும், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய போட்டிகள் மதியம் 2.00 மணிக்கும் நடைபெறும். குழுவாக போட்டியில் பங்கு பெற அனுமதியில்லை. தனிநபராக அதிகபட்சம் 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்திட அனுமதிக்கப்படுவார்கள்.

குரலிசையிலும், நாதசுரம், வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், கோட்டுவாத்தியம். மாண்டலின். கிதார். சாக்சபோன், கிளாரினெட் போன்ற கருவி இசைப்போட்டிகளில் 5 வர்ணங்கள் மற்றும் கற்பனை இசை (மனோதர்ம இசை) நிகழ்த்தும் தாத்தில் உள்ள இளைஞர்கள் பங்கு பெறலாம். தாளக்கருவிகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங். கொன்னக்கோல் ஆகிய பிரிவுகளை சார்ந்தவர்கள் ஐந்து தாளங்களில் வாசிக்கின்ற தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

பரதநாட்டியத்தில் 3 வர்ணங்கள் மற்றும் பாடல்கள் நிகழ்த்தும் நிலையில் உள்ளவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.கிராமிய நடனத்தில் கரகாட்டம், கணியான் கூத்து, காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்) மலைமக்கள் நடனங்கள் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும்.

Post a Comment

0 Comments