Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Education Minister: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள  செய்தி அதன் முழு விவரங்கள் பின்வருமாறு:




பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறைச் செயலர் காகர்லா உஷா, இயக்குநர் க.அறிவொளி உள்ளிட்ட உயரதிகாரிகள், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட் டக்கல்வி அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் Education Minister அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறுகையில் பள்ளிகளில் மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கி சாதிரீதியான மோதல்களை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிகளில் மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணித்து மோதல்களை முன்கூட்டியே தடுக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பின்னணி குறித்து ஆராய்ந்து அக் னகறையுடன் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். பள்ளிக் கல்வித் துறையைச் சார்ந்தவர்கள் பொறுப்புடன் நடந்து உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பள்ளி வளாகத்தில் மாணவர்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சாலை விபத்து தனியார் பள்ளிகளின் வாகனங் கள் மூலமாக நிகழும் விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அனைத்து தேர்வுகளிலும் மாணவர்கள் கலந்து கொள்ளும் வகை யில் ஆசிரியர்கள் அவர்களை தயார் செய்ய வேண்டும்.

 மழைக்காலங்களில் பள்ளி கட்டடங்கள் பழுதடைந்திருந்தால் அதை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். காலாண்டு தேர்வுக்கான அனைத்து வேலைகளையும் முன்கூட்டியே திட்டமிட்டு முடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments