Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TN Govt jobs: தமிழக அரசு வேலை - data Entry Operator Jobs

தமிழ்நாடு அரசு. சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் காஞ்சிபுரம் மாவட்ட குழந்தை நல குழுவில் (child Welfare Committee) காலியாகவுள்ள உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 




காஞ்சிபுரம் மாவட்ட குழந்தை நல குழு (child Welfare Committee)

தமிழ்நாடு அரசு, சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் காஞ்சிபுரம் மாவட்ட குழந்தை நல குழுவில் (chid Welfare Committee) காலியாகவுள்ள உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator) பணியிடத்தை முற்றிலும் தற்காலிகமாக ஓராண்டு கால தொகுப்பூதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில், ரூ.11.916/- (ரூபாய் பதினோராயிரத்து தொள்ளாயிரத்து பதினாறு மட்டும்) பூர்த்தி செய்யப்பட உள்ளது.

கல்வி தகுதிகள் என்னென்ன? மேற்படி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள்:

1. காஞ்சிபுரம் மாவட்டத்தை வசிப்பிடமாக கொண்டவராக இருத்தல் வேண்டும்.

2. வயது வரம்பு 18 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.

3. குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

3. தட்டச்சு தொழில்நுட்ப சான்றிதழ் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலையில் தேர்வு பெற்றிருக்க வேண்டும்.

4. மேலும், கணினியில் முன் அனுபவ சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி ?

மேற்கண்ட தகுதிகளுடைய விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் காஞ்சிபுரம் மாவட்ட இணையதள ( https://kancheepuram.nic.in ) முகவரியில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், 10, 12 ஆம் மதிப்பீட்டு சான்றிதழ், ஆதார் அட்டை. Smart Card, சாதிச்சான்று, தட்டச்சு மற்றும் கணினி பயிற்சி உள்ளிட்ட சான்றிதழ்களுடன், பணி செய்தமைக்கான முன் அனுபவ சான்றிதழ்களின் நகல்களை புகைப்படத்துடன் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு வருகிற 15.09.2023-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம்.

Post a Comment

0 Comments