தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNUSRB) காவல் சார்பு ஆய்வாளர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் நிலைய அதிகாரி (Station Fire Officer SFO) பணிக்காலியிடங்களுக்கான தேர்வு 26.08.2023 அன்று நடத்தப்படவுள்ளத்தைத் தொடர்ந்து இலவச மாதிரித்தேர்வு 23.08.2023 அன்று சேலம், கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்வு காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறும். விருப்பமுள்ள தேர்வர்கள் தங்களின் பெயர், கைப்பேசி எண் மற்றும் தேர்வுக்கான பதிவு எண் (Hall Ticket Number) ஆகிய விவரங்களை 9499055941 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பி முன்பதிவு செய்துகொள்ளலாம்.
மேலும் தேர்வு நாளன்று தேர்வு நடைபெறும் வளாகத்தில் காலை 8.00 மணி முதல் 9,00 மணிக்குள் தேர்வு நுழைவு சீட்டு நகல் (Hall Ticket) மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும். காலை 9.00 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். மாதிரித் தேர்வுகள் தொடர்பான விபரங்களை 94990 55941 என்ற கைப்பேசி எண்ணில் அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
சேலம் மாவட்டத்தைச் சார்ந்த காவல் சார்பு ஆய்வாளர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் நிலைய அதிகாரி தேர்வுக்கு தயாராகும் தகுதிவாய்ந்த தேர்வர்கள் இம்மாதிரித்தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்