தமிழக அரசு அங்கீகாரத்துடன், சென்னை, தரமணியில் இயங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், குறைந்த கட்டணத்தில் நடத்தப்படும் தமிழ் முதுகலை பட்டப் படிப்பு மற்றும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு
தமிழ்மொழி வளர்ச்சிக்கெனத் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி
நிறுவனத்தில் பல்வேறு கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து
நடைபெற்று வருகின்றன.
தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், தமிழ் முதுகலை (M.A. Tamil) மற்றும் ஐந்தாண்டு
ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப்படிப்பு (Five Year Integrated M.A. Tamil) ஆகியன
இந்நிறுவனத்தில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப் பெற்று வருகின்றது. 2023-24ஆம் கல்வியாண்டிற்கான இப்பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மாணவர்கள் நலன் கருதி 22.09.2023 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டு நேரடி சேர்க்கை (Spot Admission) தற்பொழுது நடைபெற்று வருகிறது. மேற்கண்ட படிப்புகளில் பயில விரும்புவோர் சேர்க்கைத் தொடர்பான
விதிமுறைகள்/தகவல்கள் மற்றும் விண்ணப்பங்களை www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து தெரிந்துக் கொள்ளலாம்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்