Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

உதவி தொகையுடன் கூடிய ஆராய்ச்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு




தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் வரலாறு / சமூக அறிவியல் / தமிழ் / தொடர்புடைய துறைகளில் உதவித் தொகையுடன் கூடிய ஓராண்டு ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு, முதுகலை பட்டப்படிப்பை முடித்த கல்வியாளர்களிடமிருந்து சென்னை,எழும்பூர்,ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையரால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இத்திட்டத்தின் நோக்கம் ஆர்வமுள்ள முதுகலை பட்டதாரிகள் ஆவண காப்பகத்தின் தொன்மையான ஆவணங்களை ஆராய்ந்து சமூகத்திற்கு பயனளிக்க கூடிய வகையில் தங்களது ஆராய்ச்சனையும் மேம்படுத்திக் கொள்வதற்கும் தமிழ்நாட்டின் சமூக வரலாற்றினை வெளி கொணர்வதற்கும் உதவுவதாகும்.

விண்ணப்பத்தின் விவரங்கள் மற்றும் படிவம் ஆகியவற்றை www.tnarchives.tn.gov.in என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன விண்ணப்பங்கள் இவ் அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் மற்றும் நேரம் 30.06.2023 மாலை 5.00 மணி.



Post a Comment

0 Comments