பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கும் நிலையில் யார் யாருக்கு வழங்க வேண்டும் என்ற பட்டியலும் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் 2023-2024அஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தாக்கல் செய்தார். இதில் பெண்களுக்கான சிறப்பு அறிவிப்புகள் குறித்து கூறுகையில் தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை September 15ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது எனத் தெரிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து யார் யாருக்கெல்லாம் உரிமை தொகை பெற தகுதியானவர்கள்,யாருக்கெல்லாம் இந்தத் தொகை பொருந்தாது என்ற கேள்வி மக்களிடையே எழுந்தது.
இந்தநிலையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் நடைபாதையில் வணிகம் செய்யும் மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறியகடைகள், சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர் உள்ளிட்டோர் இந்த திட்டத்தின் கீழ்பயன் பெறுவார்கள்.
மகளிர் உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசுஉள்ளிட்டஅமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்