TNTET LATEST NEWS
Tet Protest
சென்னை DPI வளாகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 2012 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருக்கும் பணி வாய்ப்பு வழங்கப்பட்டது.
2013 ஆம் ஆண்டு வெயிட்டேஜ் முறை பின்பற்றப்பட்டது. இந்த வெயிட்டேஜ் முறைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டின் ஆசிரியர் புதிய நடைமுறை கொண்டுவரப்படும் என்று தெரிவித்த நிலையில் அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்திற்காக மீண்டும் ஒரு நியமனத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டன. மேலும் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
இதனை தொடர்ந்து தற்போது நியமன தேர்வை ரத்து செய்யக் கூறியும், வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோரியும் மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் சென்னை DPI வளாகத்தில் நேற்று முதல் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
போராட்டம் வீடியோ -CLICK HERE
2 Comments
நியமன தேர்வில் தேர்ச்சி பெற முயற்சி செய்யுங்கள்... pgtrb ல ஒரு தடவ eligible மார்க் வாங்கி வேலை கிடைக்கலானா அடுத்த தடவை posting போடுவங்களா... இது என்ன நியாயம்... tet is just eligibility test...
ReplyDelete2019..2017..2022-23 candidates kum serthu posting podunga
Kalvi alert indha news ku mattum highlight pandringalo
ReplyDeleteKalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்