Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வியல் சேர்வது குறித்த சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள உதவி எண்கள் - பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேர்வது குறித்த சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதற்காக பள்ளி கல்வித்துறை புதிய எண்களை அறிவித்துள்ளன. அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:


தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை காலை 9:30 மணிக்கு பொது தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. இதனை தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உயர்கல்விகள் சேர்வது குறித்த சந்தேகங்களான பாடப்பிரிவுகளை எப்படி தேர்வு செய்வது? கட் ஆப் மதிப்பெண்கள் குழப்பம் போன்றவற்றை தீர்க்கும் விதமாக 14417 என்ற உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.

இதில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மாணவர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

Post a Comment

0 Comments