Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TET - ஆசிரியர் தகுதி தேர்வு - புதிய செய்தி

ஆசிரியர் தகுதி தேர்வு பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி. அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:



தமிழகத்தில் TN TET தேர்வு நடைபெற்று அதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த தேர்வு முடிவுகளில் மிகக் குறைந்த அளவிலேயே தேர்வர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இது கல்வியாளர்களை பெரிதும் பேசு பொருளாக இருந்த நிலையில், விடைத்தாள்களை திருத்துவதில் நடந்த குளறுபடிகள் தான் தேர்ச்சி சதவீதம் குறைந்தது காரணம் என தேர்வர்கள் குற்றம் சாட்டிஉள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

எடுத்துக்காட்டாக ஒரு கேள்வியில் இந்தியாவில் எந்த மாநிலத்தில் ரயில் போக்குவரத்து கிடையாது? என்ற கேள்விக்கு மேகலாயா என்ற விடையை TRB அறிவித்து அதற்கு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த கேள்விக்கு சரியான பதில் சிக்கிம் என்பது சரியான விடை என தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.


இதனைத் தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு சிறிய குறை கூட இல்லாமல் நடத்தப்படும் வேண்டும் எனவும், TET இரண்டாம் தாள் மதிப்பீடு செய்ததில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து தேர்வர்களிடமிருந்து  பெறப்பட்டுள்ள விடைகளை கல்வியாளர்கள் கொண்டு ஆய்வு செய்து சரியான Answer பட்டியலை தயாரிக்க வேண்டும் எனவும் ,அதன் அடிப்படையில் அனைத்து விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்து புதிய முடிவுகளை வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments