Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TET LATEST NEWS:ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான செய்தி- அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்!

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான செய்தி. அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:



தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் திருவாரூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தில் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டார். இந்த நிகழ்விற்கு பின் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது:


தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு எப்போது நடத்தப்படும் என  செய்தியாளர் கேட்கப்பட்ட கேள்விக்கு கடந்த இரண்டு வருடங்களாக போட்டித் தேர்வுகள் நடத்தப்படவில்லை எனவும் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக 149 government order ரத்து செய்ய வேண்டும் எனவும் பலரும் கோரிக்கை விடுத்து வருவதால் அது குறித்து ஆலோசித்து வருவதாகவும், அதற்கான முடிவை எடுத்த பிறகு உரிய அறிவிப்பு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் திமுக தேர்தல் வாக்குறுதியாக சொன்னதை அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருவதாகவும், தேவை வரும்போது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


புதிய ஆசிரியர்களை நியமிக்க வாய்ப்புள்ளதா என்ற செய்தியாளர் கேட்ட கேள்விக்கு , காலி பணியிடங்களை  நிரப்புவதற்கு TRB - யிடம் கால அட்டவணை வழங்கப்பட்டு உரிய நேரத்தில் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments