Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

கோடைகால கலை பயிற்சி முகாம்- student summer camp




நாமக்கல் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை மூலம் செயல்படும் நாமக்கல் ஜவகர் சிறுவர் மன்றத்தின் சார்பாக நாமக்கல் கோட்டை நகரவை உயர்நிலைப் பள்ளியில் 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் ஆக்கப்பூர்வமான நுண்கலை திறமைகளை வெளிக்கொணரும் விதமாக வருகின்ற மே 1 முதல் மே 15 ஆம் தேதி வரை இலவச நுண்கலை பயிற்சிகள் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

 தற்காப்புக்கலை, யோகா, சிலம்பம், கராத்தே, பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் மற்றும் கைவினை ஆகிய நுண்கலை பயிற்சிகள் வழங்கப்படும், பயிற்சியில் சிறப்பாக பங்கேற்று திறமையை வெளிப்படுத்தும் குழந்தைகளை அரசு சார்பில் நடைபெறும் மாநில அளவிலான கலை பயிற்சி முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவார்.

மேலும் முகாமில் கலந்து கொள்ளும் குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

ஜூன் 2023 மாதம் முதல் 2024 மார்ச் மாதம் வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நுண்கலை பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

வருடம் முழுவதும் கலந்து கொள்ள ஆண்டு சந்தா ரூ.200/- செலுத்தி பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம்.

விடுமுறை நாட்களில் குழந்தைகள் பயனுள்ள வகையில் தங்களுடைய தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை ஜவகர் சிறுவர் மன்றத்தின் மூலம் நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள பெற்றோர்கள்,ஆசிரியர்கள் கேட்டுக்கொள்கிறோம். மாணவ மாணவிகளை சேர்த்து பயன்பெற

தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்:  94432 24921, 6382918902

Post a Comment

0 Comments