Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Good News: வீட்டிலிருந்தே Smart Card நகல் பெறும் வசதி- அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்!

மக்கள் அனைவருக்கும் பயன்பெறும் வகையில் ஒரு முக்கிய செய்தியும் அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:





திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட, தொலைந்த குடும்ப அட்டை நகல் இனி வீட்டில் இருந்தே பெரும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மின்னணு குடும்ப அட்டை நகலை குடும்ப அட்டைதாரர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்து பெரும் முறை 2020 முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

 ஆன்லைனில் விண்ணப்பித்தாலும் தொகையை செலுத்த, திருத்திய ஆட்டை பெற வட்ட வழங்கல் அலுவலகம் செல்ல வேண்டி உள்ளது.ஆனால் தற்போது இந்த நடைமுறையை மாற்றி குடும்ப அட்டைதாரர்கள் குடும்ப அட்டை நகல் பெற வட்ட வழங்கல் அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளன.

 இணைய வழியிலேயே  பணம் செலுத்திட அதுமட்டுமல்லாமல் அஞ்சல் வழியிலேயே தங்கள் முகவரியில் பெற்றிடும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

நகல் குடும்ப அட்டைக்கு  விண்ணப்பிக்கும் போது ரூபாய் 45 செலுத்தினால் அச்சிடப்பட்ட நகல் குடும்ப அட்டை அஞ்சலில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய நடைமுறையை அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், சக்கரபாணி முன்னிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

Post a Comment

0 Comments