Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Exam Timetable: 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை- ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு - அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்!

தமிழகத்தில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலுள்ள மாணவர்களுக்கான ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளன. அதனை பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:


ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள  பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு தேர்வு அட்டவணையை அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர்கள் தனித்தனியாக தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளனர்.


இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆண்டு தேர்வு ஏப்ரல் 11-ம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் என செய்திகள் வெளியாகி உள்ளன.


I) ஆறாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் காலை 9:30 மணி முதல் மதியம் 12  மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

II) ஏழாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 1.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.



இதனைத் தொடர்ந்து,பள்ளிக் கல்வி - MADURAI DISTRICT - 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு - தேர்வு கால அட்டவணை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் அனுப்புதல்.


குறிப்பு: வினாத்தாட்களின் எண்ணிக்கையினை 10.04.2023 அன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 2.00 மணியளவில் வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் சரிபார்த்துக்கொள்ளுமாறு அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 வினாத்தாள் எண்ணிக்கையில் சந்தேகம் ஏதும் இருப்பின் பொதுத் தேர்வு அமைப்பாளரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒவ்வொரு நாளும் காலை 8.00 மணியளவில் வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் அன்றைய தினத்திற்குரிய வினாத்தாட்களை எடுத்துக்கொள்ளுமாறு அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



Post a Comment

0 Comments