Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TRB TODAY PRESS RELEASED

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண்.01/2022, நாள் 07.03.2022ன் படி ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-II ற்கான கணினி வழித்தேர்வுகள் (Computer Based Examination) 03.02.2023 முதல் 15.02.2023 வரை காலை / மாலை இருவேளைகளில் நடத்தப்பட்டது. 

இத்தேர்வில் 2,54,224 தேர்வர்கள் கலந்து கொண்டனர். தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் (Tentative key Answer) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.nic.in-ல் 22.02.2023 அன்று வெளியிடப்பட்டது.

தற்காலிக விடைக்குறிப்பிற்கு 22.02.2023 முதல் 25.02.2023 பிற்பகல் 5.30 மணி வரை தேர்வர்கள் இணையவழியில் தங்களது ஆட்சேபனைகளை (Objections) தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் மேற்காண் தேதியில் பெறப்பட்ட அனைத்து ஆட்சேபனைகளையும் பாடவாரியாக வல்லுநர்குழு அமைக்கப்பட்டு முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது,

 ஆய்வுக்குப்பின் பாட வல்லுநர்கள் குழுவால் இறுதி செய்யப்பட்ட விடைக்குறிப்புகளின் அடிப்படையில் தேர்வர்களது கணினி வழித் தேர்வு விடைத்தாளினை மதிப்பீடு செய்து மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன.

தற்பொழுது தேர்வு எழுதிய அனைத்து தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இறுதி விடைக்குறிப்புடன் வெளியிடப்படுகிறது.

Post a Comment

0 Comments