Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித் தொகை பெற மாணாக்கர்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு துவங்க உதவும் அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி

சென்னை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெளியிட்ட செய்தி குறிப்பில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவி தொகை பெற ஏதுவாக, அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியுடன் இணைந்து, அந்தந்த பள்ளிகளிலேயே மாணாக்கர்களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி மாணாக்கர்கள், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்கி பயன்பெறுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை மாவட்டத்தில் சுமார் 21744 மாணாக்கர்களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாமல் இருந்ததாகவும், கடந்த 10 நாட்களாக பள்ளிகளில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம் 2894 மாணாக்கர்களுக்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 18850 மாணாக்கர்களுக்கு வரும் 25ஆம் தேதிக்குள் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் மட்டுமில்லாமல், அருகில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் உள்ள அலுவலரை/தபால்காரரை அணுகி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்கலாம் எனவும் சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தபால்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் அலகு (Bio Metric Machine) மூலம், மாணாக்கர்கள் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் பயன்படுத்தி e-kyc (விரல் ரேகை) மூலம் ஒரு சில நிமிடங்களில் இந்தியா போஸ்ட்பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments