சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, புதிதாக பாலிடெக்னிக் கல்லூரி அமைப்பது குறித்த பிரதான வினாவை, திமுக உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலமும் (அந்தியூர்), துணை வினாவை பாமக உறுப்பினர் சதாசிவமும் (மேட்டூர்) எழுப்பினர். இதற்கு அமைச்சர் க.பொன்முடி அளித்த பதில் அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:
தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவாகவே இருக்கிறது. மொத்தமுள்ள 6,295 இடங்க ளில், 3,384 இடங்கள் காலியாக உள்ளன. பாலிடெக்னிக் கல்லூரிக ளின் தரத்தை உயர்த்தி சேர்க்கையை அதிகரிக்க நிதிநிலை அறிக்கையில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளை திறன்மிகு மையங்களாக மாற்ற அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு திறன் பயிற் சிகளை அளிப்பது போன்றவற்றுக்காகரூ.120 கோடியில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாலிடெக்னிக் கல்லூரிகளில் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்புக்கான பயிற்சிகளை அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கான ஆர்வத்தை அதிகரிக்க முயற்சித்து வருகிறோம் என்றும், சேலம், ஈரோடு, கோவை போன்ற மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அதிகம் இருக்கின்றன. எனவே அந்தத் தொழிற்சாலைகளில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வகையில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் கல்வி நிலை இருந்தால், மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை உயரும். ஏற்கெனவே இருக்கக் கூடிய காலியிடங்களை நிரப்பிய பிறகு புதிய கல்லூரிகளைத் தொடங்குவதைப் பற்றி முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் க.பொன்முடி என தெரிவித்துள்ளார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்