உயர்தொழில் நுட்பக் கணினி ஆய்வகங்கள் 2996 அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 540 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் சுமார் ரூ. 175 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். இதனால் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் கணினிஆய்வகங்கள் இருக்கும் நிலை உருவாக்கப்படும்.
2. திறன் வகுப்பறைகள்
தமிழ் நாட்டிலுள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் திறன் வகுப்பறைகளை உருவாக்கும் திட்டத்தின் இரண்டாவது கட்டமாக வரும் கல்வியாண்டில் சுமார் ரூ.150 கோடி மதிப்பீட்டில் 7500 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும்.
3. மாதிரிப் பள்ளிகள்
ஆர்வமும் திறமையும் உள்ள அரசுப் பள்ளிமாணவர்களின் உயர்கல்விக் கனவுகளை நன்வாக்க 25 மாவட்டங்களில் மாதிரிப் பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இத்திட்டம் மேலும்13மாவட்டங்களுக்குவிரிவுபடுத்தப்பட்டு அனைத்து, மாவட்டங்களிலும் தலா ஒரு 'மாதிரிப் பள்ளி என் உருவாக்கப்படும்.
இத்திட்டத்திற்கென வரும் நிதி ஆண்டில் சுமார் 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
4. மாபெரும் வாசிப்பு இயக்கம்
அரசுப் பள்ளிகளில் நூலகச் செயல்பாடுகள் ஆசிரியர்கள். மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை மேலும் ஊக்குவிக்க மாபெரும் வாசிப்பு இயக்கம் சுமார் ரூ.10 கோடி, மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
மேலும் அறிவிப்புகள் பற்றிய விவரங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளன.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்