Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

TNPSC, TET, TRB MATERIALS - 6- ஆம் வகுப்பு - 2-விசையும் இயக்கமும்





TNPSC, TET TRB MATERIALS - இன்றைய பகுதி

ஆறாம் வகுப்பு -2-ம் பாடம் -விசையும் இயக்கமும்

இயக்கம் மற்றும் ஓய்வு என்றால் என்ன?
காலத்தைப் பொறுத்து ஒரு பொருளின் நிலை மாறும் எனில் அது இயக்கம் எனப்படும் அப்பொருள் ஒரே இடத்தில் இருக்கும் எனில் அது ஓய்வு நிலை எனப்படும்.

இந்தியாவின் பழங்கால வானியலாளர் யார்?
ஆரியபட்டா

வானில் உள்ள நட்சத்திரங்கள் நாம் காணும் போது கிழக்கிலிருந்து மேற்காக செல்வதாக தோன்றுவதால் நிச்சயம் நமது பூமி மேற்கிலிருந்து கிழக்காக தான் சுற்ற வேண்டும் என ஆரியபட்டா அவர்கள் தெரிவித்துள்ளார்.

விசை என்றால் என்ன?
தள்ளுதல் அல்லது இழுத்தல் செயல்களே விசை எனப்படும்.


விசைகள் பொதுவாக இரண்டு வகைப்படுத்தப்படும்.

தொடு விசை(contact force)
தொடா விசை ( non contact force)

தொடு விசை என்பது பொருள்களை தொடுவதன் மூலம் விசையானது செயல்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டு : மாடு வண்டியை இழுப்பது
 

தொடாவிசை என்பது பொருளினை தொடாமல்  விசையானது செயல்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டு :புவி ஈர்ப்பு விசை

விசை ஒரு பொருளின் மீது செயல்படும் போது அதை ஏற்படுத்தும் மாற்றங்கள

ஒரு பொருளின் மீது விசையானது செயல்படும்பொழுது அப்பொருளை ஓய்வு நிலையிலிருந்து இயக்க நிலைக்கு அல்லது இயக்க நிலையில் உள்ள பொருளை ஓய்வு நிலைக்கு கொண்டு வருகிறது.

ஒரு பொருளின் மீது விசை செயல்படும் பொழுது பொருளின் வேகமும் அதன் திசைவேகமும் மாறுகிறது.

ஒரு பொருளின் மீது விசை செயல்படும் பொழுது அப்பொருளின் வடிவம் மாறுகிறது அதாவது விரிவடைகிறது அல்லது சுருங்குகிறது.


இயக்கத்தின் வகைகள் மொத்தம் நான்கு வகைப்படும்: அவை 
சுழற்சி இயக்கம் 
வட்டப்பாதை இயக்கம் 
நேர்கோட்டு இயக்கம்  
அலைவு இயக்கம்

ஒரு பொருளின் பாதையை பொறுத்து அதன் இயக்கத்தை கணக்கிடலாம்.

தற்சுழற்சி இயக்கம் என்பது ஒரு புள்ளியை மையமாகக் கொண்டிருக்கும் பொருளின் இயக்கம். எடுத்துக்காட்டு: சுற்றுகிற பம்பரம்


வட்டப்பாதை இயக்கம் என்பது வட்டப்பாதையில் நடைபெறும் இயக்கமாகும். கயிற்றின் முனையில் கட்டப்பட்டு சுழற்றப்படும் கல்லின் இயக்கம் இதற்கு எடுத்துக்காட்டாகும்.

நேர்கோட்டு இயக்கம் என்பது நேர்கோட்டுப் பாதையில் நடைபெறும் இயக்கமாகும்.
எடுத்துக்காட்டு:நேர்கோட்டுப் பாதையில் செல்லும் கார்

வளைவு பாதை இயக்கம் என்பது முன்னோக்கி சென்று கொண்டு இருக்கும் ஒரு பொருளின் பாதையின் திசையை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருப்பது. எடுத்துக்காட்டாக வீசி எறியப்பட்ட பந்து.

அலைவு இயக்கம் என்பது ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் முன்னும், பின்னும் அல்லது வலது இடமாகவோ மாறி மாறி இயங்குவது. தனி ஊசல் இதுக்கு தகுந்த எடுத்துக்காட்டு.

ஒழுங்கற்ற இயக்கம் என்பதையும் வெவ்வேறு திசையில் நகரும் பொருளின் இயக்கமாகும். கூட்டம் நிறைந்த பகுதியில் மக்கள் நடந்து செல்லும் மக்களின் இயக்கம் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு

காகிதத்தினால் செய்யப்பட்ட விமானம் அல்லது ஏவுகணையை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் வீசப்படுகின்ற இயக்கம் வளைவு பாதையை என அழைக்கப்படுகிறது.

ஒரு அறையில் இயங்கும் 'ஈ' ஒன்றின் இயக்கம் சீரற்ற இயக்கம் ஆகும்.

கால இடைவெளி அடிப்படையில்  இயக்கத்தை இரண்டு வகைகளாக இயக்கத்தை பிரிக்கலாம்
கால ஒழுங்கு மற்றும் கால ஒழுங்கற்ற இயக்கம் என்றால் என்ன?

கால ஒழுங்கு இயக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் நடைபெறும் இயக்கம் ஆகும். எடுத்துக்காட்டாக புவியை சுற்றி வரும் நிலவின் இயக்கம் 

காலம் ஒழுங்கற்ற இயக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில
 சீராக நடைபெறாத இயக்கம். எடுத்துக்காட்டு: காற்றில் அசைந்தாடும் கொடியின் இயக்கம்.

குறிப்பு: அலைவு இயக்கம் அனைத்துமே கால ஒழுங்கு இயக்கமாக அமையும். ஆனால் கால ஒழுங்கு இயக்கங்கள் அனைத்தும் அலைவு இயக்கமாக இருக்காது.

வேகம்:
வேகம் என்பது ஓரலகு காலத்தில் ஒரு பொருள் கடந்த தொலைவு.

வேகத்தை அளவிட பயன்படுத்தப்படும் சூத்திரம்

வேகம்=கடந்த தொலைவு/எடுத்துக்கொண்ட காலம்

Speed= distance/time = m/s- SI UNIT

தொலைவின் மதிப்பை கண்டுபிடிக்க அதற்கான சூத்திரம்:

கடந்த தொலைவு=வேகம் x காலம்
d=s x t

நேரத்தின் மதிப்பை கண்டுபிடிக்க அதற்கான சூத்திரம்:

நேரம்= கடந்த தொலைவு/வேகம்
t=d/s

உசைன் போல்ட் அவர்கள் 100 மீட்டர் தூரத்தினை 9.58 வினாடிகளில் கடந்துள்ளார்.


சீரான வேகத்தின் அடிப்படையில் இயக்கத்தை இரண்டு வகைகளாக பிரிக்கலாம் அவை

சீரான இயக்கம் 
சீரற்ற இயக்கம்

சீரான இயக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட காலக இடைவெளியில் சீரான வேகத்தில் இயங்கும் பொருளின் இயக்கமாகும்.

சீரற்ற இயக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மாறுபட்ட வேகத்தில் இயங்கும் இயக்கம் சீரற்ற இயக்கம்.

தையல் இயந்திரத்தில் உள்ள பலவித இயக்கங்கள்:

தையல் ஊசியின் இயக்கம்------------

சக்கரத்தின் இயக்கம்-----------

மிதிப்பான் இயக்கம்-----------

ரோபாட்:
ரோபாட் என்பதின் பொருள் உத்தரவுக்கு படித்த ஊழியர் என்பதாகும்.

ரோபாட் என்ற சொல் ரோபாட்டா என்ற செக்கோஸ்லோவாகியா என்ற வார்த்தையில் இருந்து உருவாக்கப்பட்டது.

ரோபாட்டுகளின் உணர்திறன் எது?
ரோ பாட்டுகளின் உணர் திறன் கண் மற்றும் காது.

 ரோபாட்கள் ரேடியோ அலைகள் பரிமாற்றும் மூலம் செய்திகளை அனுப்பவும் பெறவும் செய்கின்றன.

ரோபாட்டுகளால் சிந்திக்க இயலுமா?
ரோபாட்டுகளால் சிந்திக்க முடியும். ஆனால் அவற்றை உணர முடியாது.

Nanoரோபாட்டுகள் நுண்ணிய இடங்களில் தங்கள் பணிகளை செய்வதற்காக உருவாக்கப்பட்ட மிகப்சிறிய ரோபாட்டுகள்.

ஏதேனும் தவறு இருந்தால் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் பண்ணவும் நண்பர்களே!








Post a Comment

0 Comments