Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Holiday -விடுமுறை அறிவிப்பு- எந்த மாவட்டம்? எப்போது?- முழு விபரங்கள்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தக்கலை செய்கு பீர் முஹம்மது ஸாகிபு ஒலியுல்லா (ரலி) ஆண்டு விழாவினை முன்னிட்டு 06.02.2023 (திங்கட்கிழமை அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

06.02.2023 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளுர் விடுமுறைக்கு ஈடாக 2023 மார்ச் திங்கள் இரண்டாவது சனிக்கிழமை (11.03.2023) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தக்கலை செய்கு பீர்முஹம்மது ஸாகிபு ஒலியுல்லா (ரலி) ஆண்டு விழாவிற்கு உள்ளுர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881) -இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 06.02.2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments