Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழகத் தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்கள்-விண்ணப்பங்கள் வரவேற்பு

ஓராசிரியர் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங் களுக்கு இடைநிலை ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட உள்ளனர். அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:


வேலூர் மாவட்டத்தில் ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் தொடக்கப் பள்ளிகளில் ஓராசியர் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப சிறிது காலம் ஆகக்கூடும் என்பதால் அப்பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் திறன் பாதிக்கப்படாத வகையில் தற்காலிகமாக இடைநிலை ஆசிரியர்களை ரூ.7,500 மாதத் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்திட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளன.


இந்த காலி பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

காலி பணியிடங்கள் பற்றிய முழு விவரங்கள்:

வேலூர் மாவட்டத்தில் செட்டிக்குப்பம், கத்தாழம்பட்டு, சேக்கனூர், சத்துவாச்சாரி, பென்னாத்தூர் ஆர்.வெங்கடாபுரம், வெட்டுவானம், கம்மசமுத்திரம், கீழுர் கவசம்பட்டு, கே.வி.குப்பம், காட்டுபுத்தூர், சோழவரம் ஆகிய தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியி டம் தலா ஒன்று காலியாக உள்ளது.

இந்தப் பணிக்கு வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்று, இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்கள் அல்லது வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பள்ளி அமைந்துள்ள பகுதி அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
வியாழக்கிழமை(பிப். 9) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.



Post a Comment

0 Comments