Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழக அரசு வேலை -வட்டார ஒருங்கிணைப்பாளர் வேலைக்கான அறிவிப்பு

திருப்பூர் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) அவிநாசி, குடிமங்கலம், மூலனுார், காங்கயம், குண்டடம், பல்லடம், பொங்கலூர், திருப்பூர், உடுமலைப்பேட்டை, ஊத்துக்குளி வெள்ளகோவில் ஆகிய வட்டாரங்களில் உள்ள தற்காலிக 21 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கீழ்க்காணும் தகுதிகளின் அடிப்படையில் தேர்வுசெய்யப்பட உள்ளது. வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்:

1. ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கூடிய கணிணி படிப்பிற்கான (MS OFFICE) சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.

2. 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

3. பெண் பாலினத்தவராக இருக்க வேண்டும்.

4. குறைந்த பட்சம் 2 வருடம் இதே போன்ற திட்டங்களில் (Similar Projects) பணிபுரிந்திருக்க வேண்டும்.

5. பேச்சுத்திறன் மற்றும் தலைமைத் திறன் கொண்டிருக்க வேண்டும்.

6. சம்மந்தப்பட்ட வட்டாரத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.

7. இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும். 

8. வட்டார ஒருங்கிணைப்பாளரின் ஊதியம்:ரூ.12,000/-தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரிக்கு, இணை இயக்குநர் / திட்ட இயக்குநர்,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் / மகளிர் திட்டம்,
No.305, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருப்பூர்-641604
0421 - 2971149 நேரிலோ / தபால் 09.02.2023-க்குள் அனுப்பிவைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.


Post a Comment

0 Comments