Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழக அரசு வேலை- 36 ஆயிரம் ரூபாய் சம்பளம்- பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு

தமிழக அரசு வேலை:
தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பல் மருத்துவர்கள் (Dental Surgeon), பல் மருத்துவ உதவியாளர்கள் (Dental Assistant) மற்றும் மாவட்ட நலச்சங்கத்தில் காலியாக உள்ள District Quality Consultant தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 21.02.2023 அன்று மாலை 5.00 மணிக்குள்  வரவேற்கப்படுகின்றன.

கீழ்கண்ட பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது.

எந்த ஒரு பணியிடமும் நிரந்தரம் செய்யப்படமாட்டாது. 
11 மாதங்கள் முடிவுற்ற நிலையில் 1 நாள் பணியிடை முறிவு செய்து, மறு பணி நியமன ஆணை வழங்கப்படும்.


மொத்த காலி பணியிடங்கள்: 07

வேலையின் பெயர் மற்றும் சம்பள விபரங்கள்:

Dental surgeon- 36,000 ரூபாய்
Dental assistant- 13,800 ரூபாய் 
District quality consultant- 40,000 ரூபாய்

கல்வி தகுதி:
Dental surgeon- BDS (QUALIFIED) ( YEARLY REGISTER UNDER TNTC)
Dental assistant- 10TH PASS
District quality consultant-  கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

செயற் செயலாளர், மாவட்ட நலச்சங்கம் மற்றும் துணை இயக்குநர், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், காந்திஜி ரோடு, Near LIC Building, தஞ்சாவூர் - 613001. தொலைபேசி எண்: 04362- 273503 

குறிப்பு:

1) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக் குநர் சுகாதாரப்பணிகள், தஞ்சாவூர் மாவட்டம் அலுவலகத்தில் 21.02.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

2) காலி பணியிடங்கள் நியமனம் செய்வது மாறுதலுக்குட்பட்டது.

 3) இன சுழற்சி வாயிலாக காலி பணியிடங்கள் நியமனம் செய்யப்படும்.

Post a Comment

0 Comments