இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய விமானப் படையின் தாம்பரம் விமானப் படை நிலையத்தில் ஏர்மேன் பணிக்கான (Medical Assistant trade) தேர்வு முகாம் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
முகாமில் பங்கேற்க விரும்புவோர், பிளஸ் 2 அறிவியல் பிரிவில் படித்தவர்கள் மற்றும் மருந்தியலில் டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
மேலும், பிளஸ் 2 தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீதம்மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
திருமணமாகாத இளைஞர்கள் 1999-ம் ஆண்டு ஜூன் 27 முதல் 2004-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதிக்குள்ளும், திருமணமான இளைஞர்கள் 1999-ம் ஆண்டு ஜூன் 27 முதல் 2002-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதிக்குள்ளும் பிறந்திருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 152.5 செமீ உயரம் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் உடற் தகுதி அடிப்படையில் ஆட்தேர்வு நடைபெறும். மேலும், விவரங் களுக்கு www.airmenselection. cdac.in என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது கிருஷ்ணகிரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகியோ அறிந்து கொள்ளலாம் தெரிவித்துள்ளார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்