Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளில் விதி 36(1-A)8

தொழில் துறையின் 2021-22-ம் ஆண்டைய மானியக் கோரிக்கையை முன் வைத்து பேசும் போது மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள் ரகுவாரிப்பணிகளில் இருந்து வரலாற்று சின்னங்கள், பழந்தமிழர் கல்வெட்டுகள். சமணப்படுகை மற்றும் தொல்பொருள் தளங்கள் பாதுகாக்கப்படும்" என்ற அறிவிப்பை வெளியிட்டார். மேலும் புவியியல் மற்றும் சுரங்கத் துறை தொடர்பான திட்டங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆய்வு செய்தபோதும், புலிகள் காப்பகம், யானை வழித்தடங்கள், மற்றும் குவாரிப் பகுதிகளிலுள்ள குடியிருப்புகள். மற்றும் பிறவற்றை பாதுகாக்கும் பொருட்டு தற்போதுள்ள விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தூரத்தை நீட்டித்து 1959ம் 'ஆண்டைய தமிழ் நாடு சிறு கனிம சலுகை விதிகளில் திருத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

Post a Comment

0 Comments