பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வுக்கட்ட ணத்தை, வரும் டிச., 19க்குள், ஆன்லைனில் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளது. இதற்கான மாண வர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பட்டி யலில் இடம்பெறும் மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை, டிச., 19க்குள், இணையதளம் மூலம், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் செலுத்த தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதில், தமிழ் வழியில் படிப்பவர்களுக்கும், அரசு பள்ளிகளில் ஆங்கில வழியில் படித்து, பெற்றோர் குடும்ப வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்குள் உள்ளவர்களுக்கும், தேர்வுக்கட் டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மற்ற மாணவர்கள், செய்முறை பாடங்கள் உள்ள பிரிவுக்கு, 225 ரூபாய், செய்முறை இல் லாத பிரிவுக்கு, 175 ரூபாய் தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும். இது மட்டுமின்றி, அட்டவ ணைப்படுத்தப்பட்ட மதிப்பெண்பட்டியல் ஆன் லைன் மூலம் பதிவிறக்கம் செய்ய, அனைத்து பள்ளிகளும் தலா, 300 ரூபாய் செலுத்த வேண் டும் என தேர்வுத்துறை சுற்றறிக்கை மூலம் தெரி யப்படுத்தியுள்ளது.

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்