Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பள்ளிக் கல்வி –தெருநாய் அச்சுறுத்தல் – பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல் – சார்பு

பள்ளிக் கல்வி –தெருநாய் அச்சுறுத்தல் – பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல் – சார்பு

பார்வையில் காணும் பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (நாட்டு நலப்பணித் திட்டம்) அவர்களின் செயல்முறைகளில் தெருநாய் அச்சுறுத்தல் தொடர்பாக தலைமையாசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கங்கப்பட்டுள்ளது.

தெரு நாய் அச்சுறுத்தல் சார்ந்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பின்பற்ற

வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்:

1. வீடுகளில் வளர்க்கப்படும் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதை பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் அறிவுறுத்த வேண்டும். நாய்களுக்கு முறையான தடுப்பூசி

2. பள்ளியின் அறிவிப்பு பலகையில் தெரு நாய் அச்சுறுத்தல் சார்ந்த விழிப்புணர்வு பதாகைகள் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.

3. நாய் அச்சுறுத்தல் சார்ந்து விழிப்புணர்வினை வணக்கக்கூட்டத்தில் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். காலை

4. தெரு நாய்க்கடிக்கு ஒரு மாணவர் உட்பட்டிருப்பின் அதை எவ்வித தயக்ககமுமின்றி ஆசிரியரிடமோ, பெற்றோரிடமோ தெரிவிக்க உரிய அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

5. பள்ளியினை சுற்றியுள்ள இடங்களில் தெருநாய்கள் இருப்பதை கண்டறிந்தால் உடனடியாக சார்ந்த உள்ளாட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்திட வேண்டும்

6. மாணவர்கள் தெருவில் உள்ள நாய்களுடன் விளையாடுவதோ. உணவளிப்பதோ தவிர்க்கப்பட தேவையான அறிவுரைகளை வழங்குதல் வேண்டும்.

7. ரேபிஸ் நோய் தொற்று குறித்த விழிப்புணர்வினை மாணவர்களுக்கு வழங்குதல் வேண்டும்.

8. பள்ளித் தலைமையாசிரியர்கள் மேற்காண் அறிவுரையின்படி ஒரு நோடல் அதிகாரியை (Nodal Officer) நியமித்து, வளாகத்தின் பராமரிப்பு. தூய்மை மற்றும் தெருநாய்கள் வளாகத்திற்குள் நுழையவோ அல்லது வசிக்கவோ இயலாதவாறு மேற்பார்வையிட வேண்டும். மேற்கூறிய அதிகாரியின் விவரங்கள் அறிவிப்பு பலகையில் அனைவரும் அறியும் வண்ணம் இருத்தல் வேண்டும், மேலும் சார்ந்த அலுவலர் குறித்த விவரங்கள் சார்ந்த உள்ளாட்சி அமைப்புக்கு தெரிவித்திடல் வேண்டும்.


Post a Comment

0 Comments